தாடி பாலாஜி மனைவி நித்யாவை மீண்டும் கூப்பிட்ட அந்த இரண்டு இடங்கள்..! மகளுக்காக அவர் எடுத்த அந்த முடிவு!

தாடி பாலாஜியின் மனைவி நித்யா தன்னுடைய மகளுக்காக மீண்டும் தான் முன்பு பார்த்து வந்த வேலையை தொடர உள்ளதாக அவரது நெருங்கிய நண்பர்களின் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளது.


நடிகர் தாடி பாலாஜி தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வருகிறார். இவர் நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு போஷிகா என்ற ஒரு மகள் உள்ளார். திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு மத்தியில் சிறிது கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இவர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் மனைவி நித்யா உடன் இணைந்து நடனம் ஆடினார். அப்பொழுது தான் இவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையானது வெளியே தெரிய வந்தது.

தொடர்ந்து இவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் வெளியே வர ஆரம்பித்தது. போலீஸ், கோர்ட் என பல பிரச்சினைகள் வீதிக்கு வந்தது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கிடையில் தாடி பாலாஜியும் அவரது மனைவியும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்றதில் மூலமாக மீண்டும் வாழ்வில் இணைவார்கள் என்று அவர்கள் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நிகழ்ச்சியின் முடிவின் பொழுது உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் இருவரும் ஒன்று சேர்ந்தது போல் தெரியவந்தது.

ஆனால் மனதளவில் இருவரும் ஒன்றாக சேரவில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். தற்போது அவரும் அவரது மனைவியும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். நித்தியா தன்னுடைய மகளை தன்னுடன் வளர்த்து வருகின்றார். நித்தியா மழலையர் பள்ளி ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார். தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் மழலையர் பள்ளி திறக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் நித்யா. இதனால் வருமானம் இன்றி தவித்து வருவதாகவும் தன்னுடைய மகளுக்காக தாடி பாலாஜி எந்த உதவியையும் செய்யவில்லை எனவும் கூறப்பட்டது. ஆகையால் நித்தியா ஒரு புதிய முடிவு எடுத்திருப்பதாக அவரது நெருங்கிய நண்பர்களின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தாடி பாலாஜி நித்யா திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக அவர் பிரபலமான மருத்துவமனை மற்றும் பெரிய ஐடி கம்பெனியில் ஹெச் ஆராக பணிபுரிந்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்பு அவருடைய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் நித்யா. தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் வருமானம் என்று தவிக்கும் அவர் மீண்டும் தன்னுடைய பழைய வேலைக்கு திரும்பலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். அவர் முன்னர் வேலை செய்து வந்த அதே நிறுவனங்களும் அவரை வேலைக்காக அழைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அவரது நெருங்கிய நண்பர்களின் மூலம் வெளிவந்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.