நடிகர் விஷாலின் திருமணம் குறித்து அவருடைய தந்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் - அனிஷா கல்யாணம் நடைபெறுமா? நடைபெறாதா? விஷால் அப்பா முதல் முறையாக வெளியிட்ட தகவல்!
நடிகர் விஷாலுக்கும் பிரபல தொழிலதிபரின் மகளான அனிஷாவுக்கும் மார்ச் மாதம் 18-ஆம் தேதியன்று நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் திருமணத்தைப் பற்றி எந்தவித பேச்சும் இல்லாதவாறு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் சென்ற வாரம் அனிஷா ரெட்டி தங்களது திருமணம் நின்று போனதாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருந்தது. இந்நிலையில், விஷாலின் அப்பாவான ஜி.கே.ரெட்டி தமயந்தி என்ற படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது விஷாலின் திருமணம் குறித்து பேசினார்.
அதாவது, "விஷால் தன்னுடைய திருமணத்தை புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் தான் அரங்கேற்றுவேன் என்று கூறினார். உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு விஷால் அணியினர் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகும். அதன் பின்னர் அவருடைய ஊர் அணியினர் விரைவாக செயல்பட்டு நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பர். அதன் பின் அவர்களுடைய திருமணம் புது கட்டிடத்தில் நடைபெறும்" என்று பேட்டியளித்தார்.
இந்த பேட்டியை கேட்ட பிறகுதான் விஷால் ரசிகர்கள் மன நிம்மதி அடைந்தனர்.