வெளியே ரசிகர்களை விரட்டி விரட்டி வெளுத்த போலீஸ்! உள்ளே சிரித்து என்ஜாய் செய்த விஜய்! மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் பரிதாபம்!

நடிகர் விஜயை பார்க்க வேண்டும் என்று லீலா பேலஸ் ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்களை போலீசார் விரட்டி விரட்டி வெளுத்துள்ளனர.


நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலான லீலா பேலசில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். இதனை அடுத்து விஜயை பார்க்க அவரது ரசிகர்கள் ஹோட்டல் முன்பு கூடினர். ஆனால் விஜய் வேறு ஒரு வழியாக ஹோட்டலுக்குள் சென்றுவிட்டார்.

இதனால் தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் தாங்கள் விஜயை பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் ஹோட்டல் காவலாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் 7 நட்சத்திர ஓட்டலுக்குள் விழாவிற்கான அழைப்பிதழுடன் வருபவர்ளை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவலாளிகள் கூறி வந்தனர்.

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் பலர் காவலாளிகளை ஏமாற்றிவிட்டு ஓட்டலுக்குள் அத்துமீறி நுழைந்தனர். ஆனால் ஓட்டலின் உட்புறம் கதவை சாத்தி ர சிகர்கள் உள்ளே செல்லாமல் அங்கிருந்த பவுன்சர்கள் தடுத்துவிட்டனர். இதனை அடுத்து ஓட்டலுக்குள் அமர்ந்து விஜய் ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ரசிகர்களை களைந்து போகுமாறு கூறினர். ஒரு சிலர் எதிர்த்து பேசிய நிலையில் அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து மற்ற விஜய் ரசிகர்கள் அங்கிருந்து களைய ஆரம்பித்தனர். அப்போது ஒரு சிலர் ரகளையில் ஈடுபட போலீசார் அவர்களை விரட்டி விரட்டி வெளுத்து  அனுப்பி வைத்தனர்.

வெளியே இவ்வளவு களேபரங்கள் நடந்து கொண்டிருக்க உள்ளே ஒன்றும் தெரியாமல் மேடையின் நிகழ்வுகளை பார்த்து விஜய் சிரித்து ரசித்துக் கொண்டிருந்தார்.