நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி பரவிவந்தது. இதற்கு தனது பாணியில் லொள்ளுவாக பதில் அளித்திருக்கிறார் சத்யராஜ்.
மோடி பயோபிக் நடிகர் சத்யராஜ் ஓப்பன் லொள்ளு
பாலிவுட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் நடிகர் சத்யராஜ் மோடியாக நடிக்க இருப்பது உறுதி என்று கூறப்பட்டது. இந்த நிலையில், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' டீசர் விழாவில் சத்யராஜ் பங்கேற்றார்.
அவர் அப்போது, ‘பிரதமர் மோடி பயோபிக்கில் நடிப்பதற்காக எனக்கு எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அப்படியே நடித்தாலும் என்னுடைய நண்பர் மணிவண்ணன் போன்ற இயக்குனர் இயக்கினால் படத்தில் நடிக்கலாம். அவர் இப்போது இல்லை. விஜய் மில்டன் எடுக்கிறேன் என்றாலும் ஓகே.
இவர்களை தவிர்ந்து வெற்றிமாறன், பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் பிரதமர் மோடி பயோபிக்கை இயக்கினாலும் கரெக்டாக இருக்கும்’ என்று வெளிப்படையாக மோடியை கிண்டல் செய்திருக்கிறார். இதையடுத்து பா.ஜ.க.வினர் பலரும் சத்யராஜ் மீது தாக்குதல் தொடுத்துவருகிறார்கள்.