நயன்தாராவை பார்த்தால் கூப்பிட தோன்றுகிறது! ராதாரவியின் கில்மா பேச்சு!

நடிகை நயன்தாராவை பார்த்தால் கூப்பிட தோன்றுவதாக மூத்த நடிகர் ராதாரவி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.


நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ளார் கொலையுதிர் காலம் எனும் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது நயன்தாராவை தற்போது அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதாக கூறி கிண்டல் செய்தார். சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் எல்லாம் சிவாஜி எம்ஜிஆர் போன்ற legend களுக்கு மட்டுமே பொருந்தும் நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு அது பொருந்தாது என்று ராதாரவி தெரிவித்தார்.

நயன்தாரா நல்ல நடிகை என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் அவர் சில சமயம் பேயாக நடிக்கிறார் அடுத்த சமயமே சாமி யாகவும் நடிக்கிறார்.

முன்பெல்லாம் சரஸ்வதி லட்சுமி போன்ற சாமி படம் வேடங்களில் நடிக்க வேண்டுமென்றால் கே ஆர் விஜயாவைத் தான் கூப்பிடுவார்கள். ஏனென்றால் கே ஆர் விஜயா வைப் பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும் என்பது போல் இருக்கும்.

ஆனால் தற்போது பார்த்தவுடன் கூப்பிட தோன்றும் நடிகைகள் எல்லாம் சாமி வேடங்களில் நடிக்கிறார்கள் என்று சீதையாக நடித்த நடிகை நயன்தாராவை ராதாரவி விமர்சித்துள்ளார். ராதாரவியின் இந்த பேச்சுக்கு திரையுலகில் உள்ள பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.