நித்யா என்னை விட்டுட்டு போய்ட்டியே? சடலத்தை பார்த்து கதறி அழுத கார்த்தி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

சாலை விபத்தில் பலியான ரசிகரின் உடலைப் பார்த்து நடிகர் கார்த்தி கதறி அழுத சம்பவம் மனதை நெகிழ வைத்துள்ளது.


நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்யா உளுந்தூர்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் நேற்று இரவு உயிரிழந்தார். இதனை அறிந்த நடிகர் கார்த்தி, இன்று அதிகாலை வியாசை நித்யாவின் வீட்டிற்கு உடனே விரைந்தார்.

அங்கு அவரின் உடலைக் கண்ட நடிகர் கார்த்தி சோகம் தாங்க முடியாமல் கதறி அழுதார். நடிகர் கார்த்தி  ரசிகர் உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத சம்பவமானது மனதை நெகிழ வைத்துள்ளது.

வியாசை நித்யா உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் வியாசை நித்யாவின் குடும்பத்தார்கள் கதறி அழுத நிலையில் இருந்ததை கண்ட நடிகர் கார்த்தி வியாசை நித்யாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.