4 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் தமிழ் நடிகையின் கணவர் சிரஞ்சீவி சர்ஜா திடீர் மரணம்..! உயிரிழந்தது எப்படி? மனதை கனமாக்கும் தகவல்!

பிரபல தமிழ் நடிகை மேக்னா ராஜின் கணவரும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா தனது 39 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கன்னட திரையுலகில் முன்னணி இளம் கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. இவருக்கு வயது 39. நடிகர் சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 22 கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவி பெயர் மேக்னா ராஜ். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று மதியம் 1:10 மணி அளவில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தனது தந்தையுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள சாகர் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். 

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா பிரபல தமிழ் நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணச் செய்தியைக் கேட்டு ரசிகர்கள் மற்றும் கன்னட திரை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.