நடிகர் ராணா மிகவும் உடல் மெலிந்து ஒல்லியான தோட்டத்துடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒட்டிய கன்னம்! உள்ளே போன கண்கள்! மெலிந்த உடல்! என்ன ஆனது பாகுபலி பல்வாள் தேவனுக்கு?

பாகுபலி, ருத்ரமாதேவி என பல வரலாற்று சிறப்புமிக்க திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ராணா. நடிகர் ராணா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து உலகெங்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென்று அமைத்துக் கொண்டவர் ஆவார். ராணா நடித்ததிலேயே பாகுபலி திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த திரைப்படத்திற்கு பின்பு அவருக்கு உலகெங்கும் ரசிகர் கூட்டம் பெருகியது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் ராணா சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மிகவும் மெலிந்து பார்ப்பதற்கு நோயாளி போன்று தோற்றமளிக்கிறார். இதனை பார்த்த ராணாவின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் ராணாவின் ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து , "உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்கள்?" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராதாவிற்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை வெளிநாட்டில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின . மேலும் அங்கு அவர் சிகிச்சை பெற்று புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது இருப்பினும் ராணா, தான் எந்த ஒரு சிறு செயலிலும் ஈடுபடவில்லை என்று கூறியிருந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ந்து போய் உள்ளனர். ஆனால் ராணா விரதபர்வம் 1992 என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் மெலிந்து உள்ளார் எனவும் கூறப்படுகின்றது.