தண்டவளாத்தில் வந்து நின்ற கார்..! அதிவேகமாக வந்த ரயில்! அடுத்த நொடி ஏற்பட்ட கோரம்! எங்கு தெரியுமா?

ரயில்வே கிராசிங்கில் சென்று கொண்டிருந்த கார் மீது ரயில் வேகமாக மோதிய சம்பவமானது கடப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் கடப்பா என்ற இடம் அமைந்துள்ளது. கடப்பாவுக்குட்பட்ட எர்றகுண்டல மண்டலம் பகுதியிலுள்ள ஓய்.கோட்டூர் என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங் அமைந்துள்ளது. இங்கு நேற்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் வண்டி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்போது கார் ஒன்று ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது. தண்டவாளத்திற்கு அருகே வந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், கார் தண்டவாளத்திலேயே சிக்கிக்கொண்டது. துரதிஷ்டவசமாக அந்த கார் இருப்பது தெரியாமல் சரக்கு ரயில் வேகமாக வந்த கார் மீது மோதியது.

மோதிய உடனே சில மீட்டர் தூரத்திற்கு சரக்கு ரயில் காரை இழுத்து சென்றுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் நிகழ்ந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் காரில் பயணித்த நாகிரெட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு நபர் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.