அபிராமியுடன் மிக நெருக்கம்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் வெளியிட்ட புகைப்படம்! எங்கு எடுத்தது தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக முடிவடைந்தது.


இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மலேசியாவைச் சேர்ந்த முகேன் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது அபிராமியும் முகேனும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். இருப்பினும் அபிராமியின் முகேன் மீது காதல் வசப்பட்டார்.

ஆனால் அபிராமியின் காதலை முகேன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது அடுத்து பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் , அபிராமி, கவின் ஆகியோர் இணைந்து சாண்டியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு அபிராமியும் முகனும் ஒன்றாக இணைந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.