கொரோனா வைரஸ் சென்றாலும் உலகமக்கள் இன்னும் நிறைய இன்னல்களை சந்திக்க இருக்கிறது என்று பிரபல ஜோதிடர் சிறுவர் கூறியிருப்பது உலக மக்களை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
2021 வரை இந்தியாவிற்கு பேராபத்துகள் காத்திருக்கின்றன..! அதிசய ஜோதிட சிறுவனின் அடுத்த பகீர் கணிப்பு!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 85,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 14,60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் தாக்குதல் மிகவும் கொடூரமாக இருக்கக்கூடும் என்று 8 மாதங்களுக்கு முன்னதாகவே பிரபல இந்திய வம்சாவளி ஜோதிடரான அபின்ஞா ஆனந்த் கூறியிருந்தார்.
இவருடைய வயது 14. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே கிரகநிலை ஆராய்ச்சிகளின் மூலம் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய அழிவு தொடங்கப்போகிறது என்று கணித்திருந்தார். அதாவது ஜோதிடத்தின் படி ஒரு ராசியில் அதிக கிரகங்கள் சேருகின்ற போது விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் இந்த வைரஸ் தாக்குதல் முற்றிலும் ஒழிந்தாலும், உலக மக்கள் இன்னும் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். கிரக கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதாலேயே இதுபோன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறி வருவதாக கூறியுள்ளார்.
மேலும் இவற்றுக்கு எதிராக உலக மக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் தாக்குதல் ஒழிந்த பிறகும் உலக மக்கள் பல்வேறு விதமான பேராபத்துகளை சந்திக்க நேரிடும் என்றும் புதிய வீடியோவில் கூறியுள்ளார். அதாவது மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான சாப்பாட்டிற்கு பஞ்சம் ஏற்படக்கூடும் என்று கூறியுள்ளார். இதனால் உலக மக்கள் அனைவரும் சாப்பாட்டை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்தபடியாக இந்திய நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை வீழ்ச்சியை சந்திக்க இருக்கும் என்று கூறியுள்ளார். டிசம்பர் மாதத்திலிருந்து தான் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரம் மேல்நோக்கி செல்லக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்குதலை துல்லியமாக கணித்திருந்த காரணத்தினால், தற்போது அபின்ஞா ஆனந்தின் ஜோதிடம் உலகம் முழுவதிலும் கூர்ந்து நோக்கப்படுகிறது. அங்க வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.