தொப்புளில் வளையம்! பிரபல நடிகரின் மகள் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!

திரையுலக நட்சத்திரங்கள் பிரபலமாவது என்பது ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஆனால் தற்போது நிலவும் சூழலில் பிரபலங்களை விட பிரபலங்களின் குழந்தைகள் தான் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றன என்றே கூறலாம்.


இதற்கு சான்றாக பிரபல ஹிந்தி நடிகர் சாயிப் அலிகானின் மகனான தைமூர் அலிகான் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதே போல் ஹிந்தி திரை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ஷாருக் கானின் மகளான சுகானா கானிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள்.  இவர்கள் யாருமே இதுவரை எந்த  திரைப்படங்களிலும் நடிக்கவில்லை, இருப்பினும் இவர்களுக்கு ரசிகர் பட்டாளமோ மிகப்பெரிது என்றே கூற வேண்டும்.

அந்த வரிசையில் பிரபல நடிகர் ஆமிர் கானின் மகளான ஐராவும் திரளான ரசிகர்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் செய்த சம்பவம் ஒன்றை சமூக வலிதளத்தில் பதிவு இட்டு பெரும் சர்ச்சையை எழுப்பினார். அதாவது தன்னுடைய இடது கையில் "இப் வி ஒன்ட், ஹூ வில்?" என்று பச்சை குத்தியுள்ளார். இது மட்டும் இல்லாமல், தன்னுடைய தொப்புளை துளைத்து அதனை அழகு படுத்தியுள்ளார்.

இந்த புகை படத்தை  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டார் ஐரா.  இந்த புகைப்படம் வெளியான சிலமணி நேரங்களில் சமூக வலிதளத்தில் வைரலாக பரவியது. இதற்கு இவரது ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற காஃபீ வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் கானிடம், " எப்போது உங்கள் பிள்ளைகள் திரையுலகில் கால் படிக்க உள்ளனர்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ஆமிர் கான், " உன்னக்கான நேரம் வரும் வரை நீ காத்திரு, அப்படி கிடைத்தால் ஒரு நல்ல நடிகராக நடித்து காட்டு.. ஒருவேளை உன்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக படவில்லை எனில் நான் உன் முகத்திற்கு நேராக கூறிவிடுவேன். அதன் பின் , உன் நடிப்பிற்கான எந்த சப்போர்ட்டையும் நான் தரமாட்டேன்.. ஏனெனில்  நான் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஒருவேளை உன்னடைய நடிப்பு மக்களுக்கு பிடித்து இருந்தால் உன்னக்கான வாய்ப்புக்கள் தானாக  தேடி வரும்"   என்று தன்னுடைய பிள்ளைகளிடம் கூறியதாக அந்த நிகழ்ச்சியில் கரனிடம் தெரிவித்தார்.