டாக்டர் ராமதாஸ் ஜெயிலுக்குப் போவதை யாரும் தடுக்கவே முடியாது..! - ஆம்ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் கண்டனம்!

அறவழிப் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்ட ராமதாஸ் கட்சியினருக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மியின் தமிழகத் தலைவர் வசீகரன் கடும் கண்டனம் தெரித்துளார்.


ஓடும் ரயிலின் குறுக்கே தண்டவாளத்தை குறுக்கே போட்டு கவிழ்க்க பா.ம.கவினர் முயன்றுள்ளனர். ரயில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் அந்த பயணிகள் ரயில் கவிழாமல் நிறுத்தப்பட்டது பயணிகள் உயிர் தப்பினார்கள். ஆனால் நிறுத்தப்பட்ட ரயிலில் பயணம் செய்த அப்பாவி பயணிகள் மீது பா.மக.வினர் கற்களை வீசியிருக்கிறார்கள்.

இது குறித்து முறையான வழக்குகள் எதுவும் கல்வீசிய மற்றும் தண்டவாளத்தை ரயிலின் குறிக்கே போட்ட பா.ம.கவினர் மீது போலிசார் பதிவு செய்யவில்லை. அறவழிப் போராட்டம் என்று அழைக்கப்பட்ட போராட்டம் ஏன் அராஜக ப்போராட்டமாக மாறியது என பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் பா.மகவின் தலைவர் அன்புமணி வழக்கறிஞர் பாலு ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் மீது கோபத்துடன் பாய்கிறார்கள்.

ஜெ ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் திரு.ராமதாஸ் அவர்கள் பல சிறைகளுக்கு மாற்றபட்டது மறந்து போனதா? அன்புமணியின் தாயார் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து மடிபிச்சை கேட்டு கெஞ்சியது மறந்து போனதா? 

இன்று ரயில் பாதையில் தண்டவாளம் போட்டு கவிழ்க்க முயற்சித்த பா.ம.கவினர். நாளை இதைவிட மோசமான சேதம் ஏற்படக்கூடிய ஏதாவது சட்ட விரோத வன்முறைகளில் ஈடுபட்டால் டாக்டர்.ராமதாஸ் அவர்கள் ஜெயிலுக்கு போவதை முதல்வர் எடப்பாடியால் கூட தடுக்க முடியாத நிலை ஏற்பட கூடும்.

நல்ல முற்போக்கு சிந்தனை மற்றும் நாட்டின் வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு சிந்தனை கொண்ட டாக்டர் அன்புமணி அவர்கள் மீண்டும் மாற்றம் முன்னேற்றம் ஏற்படுத்திட முன்வர வேண்டும். மக்கள் விரும்பாத இது போன்ற வன்முறை ஏற்படுத்தும் போராட்டங்களை தவிர்ப்பது நல்லது என்று வசீகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.