பாஸ் ஆகனும்னா தனியா என் வீட்டுக்கு வரணும்..! மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்! பிறகு அரங்கேறிய சம்பவம்!

திருப்பதி: பாலியல் புகாரில் சிக்கிய ஆந்திர பேராசிரியர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


ஆந்திராவின் அடிகாவி நன்னய பல்கலைக்கழகத்தில் (ஏஎன்யூ) பேராசிரியராகப் பணிபுரியும் சூர்ய ராகவேந்திரா என்பவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளை அவ்வப்போது வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் சில்மிஷம் செய்து வந்திருக்கிறார். இதன்பேரில் மாணவிகள் அளித்த புகாரை முதலில் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்து வந்தது.

பிறகு, திடீரென பல்கலைக்கழகத்தின் பதிவாளராகப் பணிபுரியும் தேகி என்பவர் ராஜநகரம் போலீஸ் நிலையத்தில் சூர்ய ராகவேந்திரா மீது புகார் அளித்தார். இதையடுத்து, உரிய விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

நன்னய பல்கலைக்கழகம் முதலில் சூர்ய ராகவேந்திராவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட நிலையில் தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, போலீஸ் புகார் செய்து, அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்த விசயம் ஆந்திரா முழுக்க பரபரப்பை கிளப்பியுள்ளது.