தொடை தெரிய வேட்டி! கையில் சரக்கு பாட்டில்! மரண குத்து குத்தும் அமமுக வேட்பாளர் மகன் வீடியோ!

தஞ்சாவூர்: பிரசார வாகனத்தில் ஏறி, குடிபோதையில் அமமுக வேட்பாளரின் மகன் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


டிடிவி தினகரன் தலைமையில், அமமுக, தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிடுகிறது. இதில், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளராக, ரங்கசாமி என்பவரை அமமுக களமிறக்கியுள்ளது. இவருக்கு, மனோ பாரத், வினோ பாரத் என 2 மகன்கள் உள்ளனர். 

இதில், மூத்த மகனான மனோ பாரத், நண்பர்களுடன் சேர்ந்து, மது அருந்தியுள்ளார். இதில், போதை தலைக்கேறிய நிலையில், அவர் அங்கேயே குத்தாட்டம் போட தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில், தங்களது கட்சியின் பிரசார வாகனம் மீதே ஏறி நின்றுகொண்டு, ராஜ்கிரண் போல தொடை தெரிய வேட்டியை மடித்துக் கட்டியவாறு, குத்தாட்டம் ஆடுகிறார்.

இந்த வீடியோவில் அமமுக கட்சியின் கொடி நன்றாக தெரிகிறது. இது, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. தொடர்ந்து வெளியாகி வரும் வீடியோக்களால், அமமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.