கொரோனா நோயாளியை காப்பாற்ற போராடிய டாக்டரின் கர்ப்பிணி மனைவிக்கு பரவிய நோய் தொற்று! அதிர்ச்சி காரணம்!

கொரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் கர்ப்பிணி மனைவிக்கு தொற்று ஏற்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்துள்ளது.

உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மேலதிகாரிகள் அந்த மருத்துவரை தனிமைப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதே மருத்துவமனையில் அந்த மருத்துவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு அவருடைய மனைவியான 9 மாத கர்ப்பிணிக்கு மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

உடனடியாக அந்த கர்ப்பிணி பெண்ணையும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தி தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மருத்துவர் வெளிநாடு எங்கும் சென்று வந்ததில்லை என்று கூறப்படுகிறது. எவ்வாறு அவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து டெல்லி மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும், டெல்லியில் இயங்கி வரும் சப்தர்ஜங் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 2 மருத்துவர்களுக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எய்ம்ஸ் மருத்துவருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டிருப்பது அதே மருத்துவமனையில் சேர்ந்த பிற மருத்துவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.