ஒரு கிராமத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் எய்ட்ஸ்! அதிர்ச்சியில் வெடித்த கலவரம்! பற்றி எரியும் ஈரான்! பரபரப்பு பின்னணி!

ஈரான் நாட்டில் எய்ட்ஸ் நோய் அதிகமாக பரவி வருவதால் வன்முறை போராட்டங்கள் வெடித்து வரும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக ஈரான் நாட்டில் எய்ட்ஸ் நோய் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை கண்டித்து லார்திகான் மாகாணத்திற்குட்பட்ட சென்னார் மஹ்மூத் கிராமத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது சுகாதார மையங்களுக்கு செல்லும்போது கிராமவாசிகளை பரிசோதிக்கும் மருத்துவர் கள் அசுத்தமான ஊசிகளை உபயோக படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் தான் எய்ட்ஸ் நோய் அதிக அளவில் பரவியுள்ளது என்று கண்டனம் தெரிவித்தனர்.

ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவரான அலி கமேனி என்பவரின் அலுவலகத்தை தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனர். மேலும் கவர்னர் மாளிகையையும், உள்ளூர் சுகாதார மையத்தையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கண்ணீர் புகைவீச்சு நடத்தினர். இந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 12 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வருகிறது.

ஈரான் நாட்டின் சுகாதார அமைச்சரான சையித் நமக்கி பொதுமக்களின் குற்றசாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். அந்த கிராமத்துவாசிகளின் போதை பழக்கமும், ஒழுங்கீன மற்ற பாலியல் உறவுகளுமே எய்ட்ஸ் நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறினார்.

ஈரான் பாராளுமன்றத்தில் மற்றொரு உறுப்பினரான முஹம்மது ஹூசைன் கூறுகையில், "அந்த கிராமத்தில் மொத்தம் 2400 மக்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 200 பேர் போதைக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் பயன்படுத்தும் ஊசிகளின் மூலமாகவே எய்ட்ஸ் நோய் பரவி வருகிறது" என்று கூறியுள்ளார்.

இந்த கிளர்ச்சியானது ஈரான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.