எய்ட்ஸ் நோயாளியால் கற்பழிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கும் தொற்றிய எய்ட்ஸ் நோய்! கேட்போரை அதிர வைத்த சம்பவம்!

ஜெய்ப்பூர்: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சோதனை மேல் சோதனை என்பதுபோல இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே நிகழ்ந்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. இதன்படி, சில மாதங்களுக்கு முன்பாக, அப்பகுதியை சேர்ந்த சிறுமியை, பாலியல் குற்றங்கள் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள ஒரு கொடூரன் பலாத்காரம் செய்துவிட்டான்.

இந்த விவகாரம் பற்றி போலீஸ் விசாரணை நடத்தி, அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அந்த சிறுமிக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதன்பேரில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி கேள்விப்பட்டதும் சிறுமி உள்பட அவரது பெற்றோர் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

''பலாத்காரம் செய்தவன், இப்படி ஒரு தொற்றுநோயை பரிசாக அளித்துச் சென்றுள்ளான். இதனை ஜீரணிக்கவே முடியவில்லை. வாழ்நாள் முழுக்க எங்களது மகளை மருந்து, மாத்திரை சாப்பிடும்படி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,'' என, சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். எனினும், சிறுமி உடல்நலத்துடன் உள்ளதாகவும், தினசரி பள்ளிக்குச் சரியான முறையில் சென்றுவருவதாகவும், அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.   

இதுகுறித்து ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் ஆனந்த் ஸ்ரீவஸ்தாவ் கூறுகையில், ''கைது செய்யப்பட்ட குற்றவாளியை சரியான முறையில் மருத்துவ பரிசோதனை செய்ய தவறிவிட்டோம். அவன் நிறைய பேரை இதுபோல பலாத்காரம் செய்திருக்கிறான். அவனால் நிறைய பேருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம்,'' என்றார்.