திருவண்ணாமலை அருகே வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின் போது அ.தி.மு.க. தொண்டர்களிடையே வெஜிடபிள் பிரியாணிக்காக தகராறு ஏற்பட்டது.
தேர்தல் பந்தியில் வெஜிடபிள் பிரியாணி! பாய்ந்து சென்று மோதிக் கொண்ட அதிமுகவினர்!

திருவண்ணாமலையை தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கலசப்பாக்கத்தில் நடைபெற்றது. தொடக்கத்தில் எல்லாம் சரியாகத் தான் சென்றுகொண்டிருந்தது.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கவுரவமாகவும், சிறப்பாகவும் தான் வேட்பாளர் அக்ரி கிருஷண மூர்த்தியை அறிமுகப்படுத்தினார். தொண்டர்களும் அமைதியாகத் தான் இருந்தனர்.
வெஜிடபிள் பிரியாணி வாசனை மூக்கில் மோதிய போது அ.தி.மு.க.வினரின் கடமைக் - கண்ணியம் - கட்டுப்பாட்டு காற்றில் கரைந்து போக ஒட்டுமொத்தமாக் பிரியாணியின் பக்கம் பாய்ந்தனர்.
பிரியாணியை சாப்பிட மட்டுமன்றி வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் அவர்களிடையை குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டதையடுத்து வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வேதனைக் கூட்டமாக மாறியது. நாட்டின் நிலைமையும் இந்த பிரியாணியில் நிலைமையும் ஒன்றுதானோ?