விஜயகாந்த் கட்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் தெரியுமா..?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தே.மு.தி.க.வில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய பலரும் கூட்டணி குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்கவேண்டும் என்று கருத்து கூறியிருக்கின்றனர்.


வருகிற தேர்தலில் 41 இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று நேற்று நடைபெற்ற தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் தே.மு.தி.க. வுக்கு வருகிற தேர்தலில் அதிகபட்சமாக 15 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அ.தி.மு.க. தலைவர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.

குறைந்த அளவிலான இடங்களை ஒதுக்கினால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க நீடிக்குமா? என்பது கேள்விக்குறியே என தே.மு.தி.க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 2006-ம் ஆண்டு தே.மு.தி.க. வுக்கு ஒதுக்கப்பட்டது போல கூடுதல் இடங்களை இந்த முறை கேட்டு பெறுவோம் என்றும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.

ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் இக்கட்டான நிலை. ஆனால், இனிமேல் தி.மு.க.வுக்குப் போவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், வேறு வழியின்றி அ.தி.மு.க. கூட்டணியில் செல்லவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும் என்பது உறுதி.