தேர்தலில் அ.தி.மு.க. விறுவிறுவென முந்துகிறது... டெமாகரசி நெட்வொர்க் கருத்துக்கணிப்பு.

தேர்தல் நிலவரம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதுதான் நிஜம். அந்த வகையில், இதுவரையில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பல கருத்துக்கணிப்புகள் வெளியாகி வந்த நிலையில், இப்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நிலைமை மாறியுள்ளது.


டெமாகரசி நெட்வொர்க் நிறுவனம் மற்றும் உங்கள் குரல் அமைப்பு கருத்துகணிப்புகள் நடத்திய மெகா சர்வேயில் ஆளும் அதிமுக கூட்டணி 122 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக 111 இடங்களை பெறும் என்றும் அமமுக ஒரு இடத்தை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பில் டெமாகரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் அமைப்பு நடத்திய கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 19முதல் 19ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் திமுக கூட்டணி 28 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் அதிமுக அரசு கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி மற்றும் முதலமைச்சரை விவசாயியாக பார்ப்பதால்தான் இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது என்றும் வெற்றி பெற்று தரும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா காலத்தில் 1000 ரூபாய் நிவாரணம், பொங்கல் பரிசாக ரூ.2500 என மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

வன்னியர்களுக்கு ஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் ஆகியவை அதிமுகவிற்கு கூடுதல் பலம் அளித்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது. சர்வேயின் போது மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஜெயலலிதா மறைந்த சமயம், கொரோனா காலத்தில் அதிமுகவின் செயல்பாடு என முதலமைச்சரின் செயல்களை பாராட்டியுள்ளனர்.இது போல எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுக்கு கருணாநிதி இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் திமுகவிற்கு நிரந்தரமாக கிடைக்கும் வாக்கு வங்கிகளுக்கு எந்த சேதாரமும் இல்லை என சர்வேயில் தெரிந்துள்ளது.

கமல் வரவால் திமுகவுக்கு தான் பாதகம் என்றும், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் மநீமவுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மீண்டும் வருகிறார் முதல்வர் எடப்பாடியார்.