தமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்! இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!

தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்டமாக தமிழகத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை முதல் கட்டமாக அதிமுக இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அதிமுக வெளியிட்டது. இந்த பட்டியலில் திருவள்ளூர் ,திருவண்ணாமலை ,நாமக்கல், மதுரை, சிவகங்கை ,ராமநாதபுரம், தூத்துக்குடி ,கரூர் ,திருச்சி ,பெரம்பலூர் ,தஞ்சை, நீலகிரி, நாமக்கல், நாகை ஆகிய இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது.
இந்நிலையில் திமுக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.