விஜயகாந்தை விரட்டுங்க! கமலை சேருங்க! எடப்பாடியிடம் கொந்தளிக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள்!

ஜெயலலிதா வெற்றிக்குக் காரணம் விஜயகாந்த் என்று தெனாவெட்டாக சொல்லும் பிரேமலதாவை கூட்டணியில் சேர்க்கவே வேண்டாம் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும்போது அடக்கம் ஒடுக்கமாகப் பேசுவதுதான் சின்னக் கட்சிகளுக்கு அழகு. ஆனால், பிரேமலதா தயவால்தான் நமது ஆட்சி நடப்பது போன்று தெனாவெட்டாக பேசிவரும் பிரேமலதாவை கூட்டணியில் சேர்க்கவே வேண்டாம் என்று சில அமைச்சர்கள் தரப்பு இன்று எடப்பாடியிடம் கோரிக்கை வைத்துள்ளன.

விஜயகாந்தை அனுப்பிவிட்டு, அவருக்குப் பதிலாக கமல்ஹாசனை கூட்டணிக்குள் கொண்டுவரலாம். நமக்கு கிளீன் இமேஜ் மரியாதை நிச்சயம் கிடைக்கும் என்று மாற்று யோசனையும் தெரிவித்திருக்கிறார்கள்.

தன்னிடம் பேசிய கட்சியினரிடம், ‘‘தேமு.தி.க.வை சேர்க்க எனக்கும் ஆசை இல்லைதான். ஆனா, கவர்னர் தொடங்கி மத்திய அமைச்சர் வரைக்கும் எல்லோரும் எப்படியாவது தே.மு.தி.க.வை கொண்டுவந்துடுங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதனால ஞாயிற்றுக் கிழமை வரைக்கும் பார்ப்போம். இல்லைன்னா நீங்க சொல்றபடி செஞ்சுப்புடலாம்’’ என்று சொன்னாராம்.

நாளைக்கு வரைக்கும் காத்திருப்பது முக்கியமில்ல, சீட்டை குறைச்சு விஜயகாந்தை அவமானப்படுத்துங்க, வந்தா நல்லது, வராவிட்டா ரொம்பவும் நல்லது என்று சொல்லியிருக்கிறார்கள். 

ஆக, கமலுக்கு நல்ல நேரம்தான்.