அதிமுக மாநிலங்களவை எம்.பி.சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார்!

அதிமுக மாநிலங்களவை சசிகலா புஷ்பா, நேற்றைய தினம் திடீரென்று பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2011 முதல் 14 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டத்தில் மேயராக பதவி வகித்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அதிமுக மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து வருகிறார். தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு இருந்த சசிகலா புஷ்பா தற்போது திடீரென புதிய முடிவை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த ஒரு மாத காலமாகவே பாஜகவிற்கு ஆதரவாகவும் மோடியின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் அந்த கருத்துக்களை வெளியிட்டு வந்தார். மேலும் மோடி தலைமையிலான அரசு தான் மக்களுக்கு நன்மையை பயக்கும் எனவும் அவர் கூறியிருந்தார். 

இப்படி சமீபகாலமாகவே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அவர் தற்போது திடீரென பாஜக கட்சியில் இணைந்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று பிற்பகல் பாஜகவில் இணைந்தார். பாஜக கட்சியில் இணைந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக கட்சியில் இன்னும் பலபேர் பாஜகவில் இணைய தயாராக இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.