அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வந்தாச்சு...? இதுக்கு என்னப்பா காரணம்..?

பிரசாந்த் கிஷோர் ஐடியாவில் உருவான, ஒன்றிணைவோம் திட்டம் காரணமாகத்தான் ஜெ.அன்பழகன் உயிர் பிரிய நேரிட்டது என்று தி.மு.க.வை அ.தி.மு.க.விவர் வறுத்து எடுத்தார்கள்


இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனிக்கு கொரானா உறுதியாகிவிட்டது. அவர் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வந்ததற்கும் ஒருங்கிணைவோம் திட்டம்தான் காரணமா என்று இப்போது தி.மு.க.வினர் பட்டயைக் கிளப்புகிறார்கள். சமூகப் பரவல் வந்துவிட்டதா என்பதை ஆராய வேண்டிய நேரம் இது என்பதுதான் உண்மை.

அதாவது, யாரிடம் இருந்து வந்தது என்று தெரியாமல் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அது சமூகத் தொற்று என்று சொல்லப்படுகிறது. ஆனால், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

உயர் கல்வி படிக்கும் மருத்துவ மாணவர்களில் 52 பேரில் 48 பேருக்கு கொரானா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களை நம்பித்தான் அரசு மருத்துவமனைகளில் கொரானா வார்டுகள் இயங்கின. மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று வருவது சகஜமாகிக்கொண்டே இருக்கிறது. ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து, சீரியஸாக செயலில் இறங்கவேண்டிய நேரம் இது. அப்போதுதான் கொரோனாவில் இருந்து சென்னையைக் காப்பாற்ற முடியும்.