தேர்தலில் சீட் தருவதாக ஏமாற்றிய அதிமுக எம்எல்ஏ மீது ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸிடம் புகார் அளிக்கப் போவதாக ஸ்ரீவைகுண்டம் பெண் அதிமுக பிரமுகர் தெரிவித்துள்ளார். அதே சமயம் அதிமுக எம்எல்வால் தனக்கு 25 வயதில் மகன் இருக்கிறான் என அந்த பிரமுகர் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
20 வயசுல இருந்து என் பின்னாடி சுத்துறார்..! அவர் மூலமா எனக்கு ஒரு மகன் இருக்கார்..! அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் - 45 வயது பெண்மணி ஆடியோ வைரல்!
ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன், மாவட்டச் செயலாளராகவும், பல துறைகளில் அமைச்சராகவும் இருந்தவர் . இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலானது. அதில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மகளிரணிச் செயலாளர் ஏரல் சரஸ்வதியிடம் ஒருவர் பேசுகிறார்.
அவருக்கு பைக்குக்கு பெட்ரோல் போடகூட ஒரு காலத்தில் எங்க தந்தையிடம்தான் காசு வாங்கிகொண்டு போவார். 20 வயசுல இருந்து என்னைச் சுற்றிச்சுற்றி வந்துவிட்டு இப்போ எனக்கு வயசாகிவிட்டது என்று சீட் தர மறுக்கிறார் ' என்று தொடங்கும் அந்த ஆடியோவில்.... அவர் மூலமா 25 வயசுல எனக்கு ஒரு மகன் இருக்கான். என் மேல உள்ள கோபத்துல அவனை ஏதாவது பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு என முடிகிறது.
இதுகுறித்து ஏரல் சரஸ்வதி கூறியபோது, நான் என் தந்தை காலத்தில இருந்தே கட்சிக்கு விசுவாசமா இருக்கேன். கட்சியில 28 வருசமா ஒன்றிய மகளிரணிச் செயலாளரா இருக்கேன். ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க சார்பில் போட்டியிட சீட் கேட்டேன். சீட் தருவதாக கூறி, எனக்கு பதிலாக ஒன்றியத்தின் முன்னாள் துணைச் சேர்மன் வசந்தாவுக்கே சீட் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து கடைசி வரைக்கும் எனக்கு சீட் தர்றேன்னு சொல்லிட்டு வேறு யாருக்கோ சீட் கொடுத்து பணமும் கொடுத்துள்ளீர்களே என சண்முகநாதனிடம் நியாயம் கேட் டேன். 20 வயது முதல் என்னுடன் சுற்றிவிட்டு வயதானதால் விலகி செல்கிறீர்களா என கேட்டேன். அதற்கு அவர், `உன்னால முடிஞ்சதை செஞ்சுக்கோ'ன்னு சொல்லி, அவதூறாக பேசினார். அவங்க வீட்டுல இருந்த அடியாட்கள் என்னை வெளியே தள்ளிட்டாங்க. போலீஸும் வந்து என்னை மிரட்டி விரட்டினாங்க.
இதுசம்பந்தமா தேர்தல் முடிஞ்சதும் எனக்கு நியாயம் கேட்டு, முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் புகார் கொடுக்கப்போறேன் என்றார். இதுகுறித்து எம்.எல்.ஏ சண்முகநாதனிடம் பேசியபோது, உள்ளாட்சித் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார். இது எனக்கு எதிரானவர்களின் தூண்டுதல்தான் காரணம். என்று கூறினார்.