தேர்தல் விதிமுறையை மீறிய ஸ்டாலின்! விரைவில் கைது! போலீசை மிரட்டும் அதிமுக!

இன்று காலையில் ஓட்டுப் போட்டதும் ஸ்டாலின் எப்போதும் போல் பத்திரிகையாளர்களீடம் பேசினார்.


அப்போது, ஆளும் கட்சிகளைத் தூக்கியெறியும் வகையில் அனைவரும் ஓட்டுப் போடவேண்டும் என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். உடனே தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் மனுவை தட்டிவிட்டு, ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துவருகிறது அ.தி.மு.க.  இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் ஆர்.எம். பாபு முருகவேல் இன்று தலைமை தேர்தல் கமிஷனருக்கு புகார் அளித்திருக்கிறார்.

தேர்தல் கமிஷன் இரண்டு நாட்களுக்கு முன்னரே, பரப்புரை செய்வதற்கு தடை விதித்திருக்கிறது. இந்த நிலையில், அந்த விதியை மீறும் வகையில் ஸ்டாலின் பேசியிருப்பது உண்மையில் கைது செய்யும் அளவுக்கான குற்றமே ஆகும்.

அதனால் இதனை மேற்கொண்டு என்ன செய்வது என்று அ.தி.மு.க. ஆலோசனை செய்துவருகிறது. கடைசி கட்டத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் ஸ்டாலினுக்கும் சிக்கல் வரலாம்.