ஆம் ஆத்மி எம்எல்ஏ வாகனம் மீது துப்பாக்கி சூடு..! தொண்டர் பலி..

தேர்தல் முடிவு வந்த மாலையே ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




நரேஷ் யாதவ் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும் பாஜக கட்சி 8 இடங்களையும் வென்றுள்ளது. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். ஆம் ஆத்மி இந்த வெற்றியை சந்தோசமாக கொண்டாடிக்கொண்டு இருந்த நேரத்தில்தான் எம்எல்ஏ நரேஷ் யாதவ் சென்ற கான்வாய் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

எம்எல்ஏ நரேஷ் யாதவ் நேற்று தேர்தல் வெற்றிக்கு பின்னால் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். கிசர்கஞ்ச் அருகே சென்று அவரின் வாகனத்தை நோக்கி ஓடி வந்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
 இந்த துப்பாக்கி சூட்டில் நரேஷ் யாதவ் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார் . ஆனால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் உயிர் இழந்தார். 

இறந்தவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என நரேஷ் யாதவ் கூறினார்.