உயிருக்கு போராடும் தந்தை! ஹாஸ்பிடலில் வைத்து கல்யாணம்! நெகிழச் செய்த மகன்!

சென்னையில் ரயில் விபத்தில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் ஆசையை நிறைவேற்ற மகன் மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்டார்.


சென்னையில் ரயில் விபத்தில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் ஆசையை நிறைவேற்ற மகன் மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்டார்.

 

   திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சரக்கு ரயில் மோதிய விபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காலை அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. 

 

இந்நிலையில் தனக்கு எதுவும் நேரலாம் என அஞ்சிய சுரேஷ் அதற்கு முன் தனது மகனின் திருமணத்தைக் காண விரும்பியதாகக் கூறப்படுகிறது. தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது மகன் சதீஷ் தான் காதலித்த சித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். 

 

இதையடுத்து இரு விட்டாரின் ஒப்புதலுடன் மருத்துவமனை வளாகதில் உள்ள விநாயகர் கோவிலில் சதீஷ் - சித்ரா திருமணம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மணமக்கள் ஜோடியாகச் சென்று படுக்கையில் உள்ள தந்தை சுரேஷிடம் ஆசி பெற்றனர். 

 

தனது தந்தை விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று சதீஷ் வேண்டுதல் தெரிவித்தார். இந்தக் காட்சிகள் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.