பயங்கர வேகத்தில் மோதிய லாரி! சீட் பெல்டால் காருக்குள் சிக்கிய சிறுவன்! ரத்தம் உறைந்து உயிரிழந்த பரிதாபம்!

கேரள மாநிலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் சீட் பெல்ட்டில் சிக்கிய சிறுவன் மீள முடியாமல் உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.


சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா எனும் இடத்திற்கு தாமஸ் மரியம தம்பதியினர் தங்களது 2 குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற கேரள மாநிலம் கொச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து எதிரே ஒரு லாரி வேகமாக வந்தது.

லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. விபத்து நடந்ததை அடுத்து பின்னால் இருந்த தாமசின் 7 வயது மகன் தப்பிக்க முயலும்போது சீட் பெல்ட் இறுக்கிக் கொண்டதால் வெளியேற முடியவில்லை நீண்ட நேரம் போராடியும் சீல் பெல்ட் இறுக்கத்தினால் வயிறு,  சிறுநீரகப் பகுதிகளில் ரத்தம் உறைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சிறுவன் இருக்கையில் ஏர் பேக் பணிசெய்யவில்லை என கூறப்படுகிறது. காரின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த தாமஸ் மற்றும் அவரது மனைவி ஏர்பேக் காரணமாக காயங்களுடன் தப்பினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த 7 வயது சிறுவனின் உடலை கைப்பற்றி, படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் கொச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

என்னதான் காரில் ஏர்பேக் உள்ளிட்ட சாதனங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் இருக்கும். ஆசை ஆசையா வளர்த்த அருமை மகனை இழக்கவும் நேர்ந்திருக்காது.