நீங்கள் யோகசாலியா? தொட்டதெல்லாம் துலங்க வேண்டுமா? உங்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கிறதா என்று பாருங்கள்!

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் காலம் 2 1/2 ஆண்டுகள் (முப்பது மாதங்கள்).


12 ராசியை சுற்றி வரும் காலம் 30 வருடங்கள். இதன்படி இன்று 3வது, 5வது, 6வது, 9வது, 10வது மற்றும் 11வது ஆகிய ராசிகளில் இருந்தால் ஏற்படும் சுப, அசுப பலன்களைப் பற்றி பார்ப்போம்.

சனிபகவான் 3வது ராசியிலிருந்தால்: நிதிநிலைமையில் மேம்பாடு, நில வசதி, வீடு வசதி, வேளாண்மையில் நல்ல மகசு+ல், கால்நடைகளால் ஆதாயம், தேகநலன், வாழ்க்கையில் சகஜ நிலை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, மனோதிடம் போன்ற சுப பலன்கள் மிகுதியாக இருக்கும்.

சனிபகவான் 5வது ராசியிலிருந்தால்: பணப்பற்றாக்குறை ஏற்பட்டு நிம்மதி குறையும். புத்திரர்களால் பிரச்சனைகள் உருவாகும். சோகம் உண்டாகும். இன்னல்கள் அதிகமாக இருக்கும்.

சனிபகவான் 6வது ராசியிலிருந்தால்: ஆரோக்கிய மேம்பாடு ஏற்படும். எதிரிகளின் தொல்லை இருக்காது. பெண்களால் ஆதாயம் உண்டாகும். பொருளாதார வசதி பெருகும். மொத்தத்தில் சுப பலன்கள் அதிகரிக்கும்.

சனிபகவான் 9வது ராசியிலிருந்தால்: நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரும். இதயநோய் ஏற்படும். சொந்த-பந்தத்தில் விரோதம் உண்டாகும். இல்லற வாழ்க்கையிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய நிகழ்வுகள் நடந்தேறும். செயல்பாடுகளில் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

சனிபகவான் 10வது ராசியிலிருந்தால்: நற்பெயருக்கு பங்கம் ஏற்படும். வீண்பழி உண்டாகும். புத்தியில் தடுமாற்றம் உண்டாகும். நிதியிழப்பு ஏற்படும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். மனக்கவலை உண்டாகும்.

சனிபகவான் 11வது ராசியிலிருந்தால்: ஜாதகருக்கு பலவிதங்களில் ஆதாயமும், பெண்களால் நற்பலன்களும் கிடைக்கும். கொண்ட கொள்கையில் பிடிப்புடனும், உறுதியுடனும் இருப்பார். மொத்தத்தில் சுப பலன்களே அதிகமாக இருக்கும்.