சாலையில் கொட்டப்பட்ட பால்..! நாய்களுடன் போட்டி போட்டு நாவால் நக்கி குடித்த நபர்..! மனதை உலுக்கும் வீடியோ..!

ஆக்ராவில் சாலையோரத்தில் பெரிய கொள்கலனில் இருந்து பால் கவிழ்ந்ததை அடுத்து தெரு நாய்களோடு இணைந்து உணவுக்காக போராடும் ஒருவர் அந்தப் பாலை தன்னுடைய மண்பானையில் சேகரிக்கும் வீடியோ பதிவு காண்போர் நெஞ்சை பதை பதைக்கிறது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நமக்கு பரவாமல் இருப்பதற்காக நடுவணரசு நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் அந்த ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மக்களின் நலனுக்காகவே வழங்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு சில பேரது வாழ்வாதாரத்தை பதம் பார்த்து உள்ளது என்று தான் கூற வேண்டும்.

நாடு முழுவதும் முடங்கிக் கிடக்கும் இந்த வேளையில் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் மக்கள் நாடெங்கிலும் பரவிக்கிடக்கின்றன. அவர்களுக்கு சான்றாக ஆக்ராவில் இன்றைய தினம் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது ஆக்ராவில் மிகப்பெரிய கொள்கலனில் இருந்து பால் கவிழ்ந்து தரையில் கொட்டியது. இந்தப் பால் ஓடையாக சாலை ஓரத்தில் ஓடத்துவங்கியது.

இதனைப் பார்த்த உணவுக்காக கஷ்டப்படும் ஒருவர் சாலையோரத்தில் இருந்த பாலை தெரு நாய்களோடு இணைந்து தான் வைத்திருந்த மண் குடுவையில் சேகரித்தார். உணவில்லாமல் கஷ்டப்பட்ட அவருக்கு இந்த பால் சாலையோரத்தில் சுகாதாரமற்ற முறையில் இருப்பதை உணரமுடியவில்லை. அவர் அவ்வாறாக பாலை தன் குடுவையில் சேகரிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு நெட்டிசன் ஒருவரால் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.

வீடியோ பதிவில் தெருநாய்கள் ஒருபுறம் அந்தப் பாலை தன் நாவால் நக்கி குடிக்கும் வேளையில் மற்றொருபுறம் இந்த உணவுக்காக கஷ்டப்படும் இந்த நபர் தன் குடுவையில் பால் சேகரிக்கும் அந்த பதைபதைக்கும் காட்சிகள் நெஞ்சை அழுத்துகிறது. தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.