மருந்தின் பெயரில் ஒரே ஒரு எழுத்தை மாற்றிய எழுதிய டாக்டரால் இளம் பெண் ஒருவர் கண் பார்வையை இழந்து தவித்து வருகிறார்.
மருந்தின் பெயரில் ஒரே ஒரு எழுத்தை மாற்றிய டாக்டர்! இளம் பெண் ணின் பார்வைக்கு நேர்ந்த கொடூரம்!
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரை சேர்ந்தவர் எலினா (பெயர்
மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு கண்களில் அடிக்கடி எரிச்சல் இருந்து கொண்டே
இருந்துள்ளது. இதனை சரி செய்ய இவர் கிளாஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
எலினா கண்களை பரிசோதனை செய்த மருத்துவர் ஜான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருந்து
ஒன்றை எழுதிக் கொடுத்துள்ளார். அந்த மருந்தை மூன்று தினங்களுக்கு கண்களில்
போடுமாறு டாக்டர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து மெடிக்கல்
ஷாப் சென்ற எலினா, டாக்டர் பரிந்துரைத்த மருந்தை வாங்கிவிட்டு வீட்டுக்கு
சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று மருந்தை கண்களில் போட்ட சில நிமிடங்களில்
எலினாவின் கண்கள் வீங்கியுள்ளன. மேலும் அவர் பார்வையும் மங்கலாகியுள்ளது. சரி
சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என எலினா காத்திருந்துள்ளார். ஆனால் நேரம் செல்ல செல்ல
எலினாவுக்கு கண்களில் வலி அதிகமாகியுள்ளது.
மேலும் எலினாவின் கண்களில்
பார்வையும் தொடர்ந்து மங்கலாகவே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த எலினா
மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அப்போது அங்கிருந்த வேறு சில
மருத்துவர்கள் எலினாவை பரிசோதித்துவிட்டு, கண்களில் என்ன மருந்து போட்டீர்கள்
என்று கேட்டுள்ளனர். அதற்கு டாக்டர் ஜான் பரிந்துரைத்த மருந்து என்று அதனை
காட்டியுள்ளார். ஆனால் அந்த மருந்தை பார்த்து மற்ற டாக்டர்கள் வாய் அடைத்துப்
போயினர்.
ஏனென்றால் எலினா கண்களில்
தடவிய மருந்து ஆண்கள் அந்த இடத்தில் தடவி உடலுறவு மேற்கொள்வதற்கானது. அதாவது VitA-POS தடவ
வேண்டும் என்று எழுதிக் கொடுப்பதற்கு பதில் டாக்டர் ஜான், Vitaros எனும் மருந்தை எழுதிக்
கொடுத்துள்ளார். பி என்பதற்கு பதில் ஆர் ஐ டாக்டர் ஜான் எழுதியுள்ளார். இதனால்
தான் மெடிக்கல் ஷாப்பில் எலினாவின் கண்களுக்கு தடவ வேண்டிய மருந்துக்கு பதில்
ஆண்கள் அந்த இடத்தில் தடவ வேண்டிய மருந்தை கொடுத்துள்ளார்.
இதனை கண்களில் தடவியதால்
தற்போது எலினாவுக்கு கண்களில் இன்பெக்சன் ஏற்பட்டுள்ளது. சிறிது நாட்கள்
சிகிச்சைக்கு பிறகு அவருக்கு பார்வை இயல்பாகிவிடும் என்று மருத்துவர்கள்
கூறியுள்ளனர். அதே சமயம் இனி மருத்துவர் மருந்து பெயரை கேப்பிட்டல் லெட்டர்களில்
மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று ஸ்காட்லாந்து அரசு கண்டிப்பான உத்தரவு
பிறப்பித்துள்ளது. இருப்பினும் டாக்டர் எழுதிய மருந்தில் ஒரே ஒரு எழுத்து
மாறியதால் பெண்ணின் பார்வையே பறிபோயுள்ளது உலகம் முழுவதும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.