மீண்டும் ஒரு மருத்துவ அதிர்ச்சி... கொரோனா தொற்றினால் மூளை பாதிப்பு ஏற்படுகிறதா…?

கொரோனா தொற்று ஏற்படும் நபர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்று பட்டியலிடப்பட்டுள்ளன.


குறிப்பாக நுரையீரல் தொற்றுதான், அதிகப்படியான மரணத்துக்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு மூளை பாதிப்பும் ஏற்படுவதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கும் பிரிட்டன் விஞ்ஞானிகள், ‘பிரிட்டனில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போதுவரை, மூளை பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

இதற்காக 40 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 12 பேருக்கு மூளை வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேருக்கு மயக்கம் இருந்ததும், 8 பேருக்கு நரம்பு பாதிப்பு இருந்ததும், மேலும் 8 பேருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தக் கூடிய நரம்பு மண்டல பாதிப்பு இருந்தது. மேலும், இந்த பாதிப்பு ஏற்பட்டோரில் 5 சதவீதம் பேர் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைவதாகவும் ஆனால் சிலருக்கு இந்த மூளை பாதிப்பு நீண்டநாள் பிரச்சினையாக மாறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கொரோனா போயாச்சு என்று சந்தோஷப்படுவது மட்டும் போதாது, பக்கவிளைவுகள் போயாச்சா என்றும் ஆராய வேண்டும் என்கிறார்கள், மருத்துவ ஆய்வாளர்கள்.