என்ஜினியர் மாப்பிளைனு பொன்ன கொடுத்தோம்..! கர்ப்பிணினு கூட பார்க்காம கழுத்தை அறுத்துட்டான்! கதறி அழும் குடும்பம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவி ஒருவர் தன் கணவனை வேலைக்கு போகும்போது வற்புறுத்தியதால் கர்ப்பிணி மனைவி என்று கூட பாராமல் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் சுப்பிரமணியம் மற்றும் கண்ணம்மா தம்பதியினர் . இவர்கள் இருவருக்கும் ஜீவிதா என்ற மகள் உள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக பொறியியல் பட்டதாரியான ஜீவிதாவிற்கு அவரது பெற்றோர் வரன் தேடி வந்து இருக்கின்றனர் .

வரன் தேடும் பொழுது அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்ற வழக்கறிஞரின் மகன் கமல் காந்த் அறிமுகமாகி உள்ளார். அற்பொழுது சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நல்ல வேலை பார்த்து வருவதால் ஜீவிதாவின் பெற்றோர் ஜீவிதாவை கமல் காந்திக்கு திருமணம் செய்து தந்துள்ளனர்.

இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கு 80 சவரன் நகையும் சொகுசான காரும் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த பின்பு கமல் காந்த் வெளிநாட்டுக்கு செல்லாமல் இந்தியாவிலேயே இருந்திருக்கிறார் . மேலும் அவரை வேலைக்கு செல்லுமாறு அவரது மனைவி ஜீவிதா வற்புறுத்தி இருக்கிறார்.

7 மாத கர்ப்பிணி பெண்ணான ஜீவிதா, தொடர்ந்து தன்னுடைய கணவரை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்திய வண்ணம் இருந்திருக்கிறார். ஜீவிதா கூறியதால் ஆத்திரமடைந்த அவரது கணவர் கமல் காந்த், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவரது கழுத்தை சரசரவென கத்தியால் அறுத்து கொலை செய்திருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஜீவிதாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

பக்கத்தினர் வீட்டுக்குள் வருவதை பார்த்த கமல் காந்த் உடனடியாக தன் கை நரம்பை கத்தியால் அறுத்துக் கொண்டு இருக்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் . மேலும் அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்திருக்கின்றனர்.

தகவலறிந்து வந்த போலீசார் ஜீவிதாவின் உடலை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஜீவிதாவின் பெற்றோரால் அவரது கணவர் கமல் காந்த் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது .இருப்பினும் அவர்களது புகார் நியாயமாக விசாரிக்கப்படவில்லை என்று அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

இதனால் ஜீவிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் அந்த கணவர் தன் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.