பாய்ந்து தாக்கிய சிங்கம்! ஒரே அடியில் கொன்று வீழ்த்திய இளைஞன்!

தன்னைத் தாக்க வந்த மலை சிங்கத்தை இளைஞர் ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.


அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ளது ஹார்ஸ் டூத் மலை. மலை மீது ஓடி பயிற்சி பெறுவோர் இங்கு ஓடுவது வழக்கம். திங்கட்கிழமை அன்று இந்த மலை மீது இளைஞர் ஒருவர் ஓடிக்கொண்டிருந்தார்.

 

அப்போது சரசரவென சத்தம் கேட்கவே அவர் திரும்பி பார்த்துள்ளார். அவருக்குப் பின்னால் ஒரு மலை சிங்கம் நிற்கவே அதிர்ந்து போன அந்த இளைஞன் என்ன செய்வதென்று தெரியாமல் பதறினார்.

 

துளியும் தாமதிக்காமல் அந்த சிங்கமானது இளைஞர் மீது பாய்ந்து தாக்க தொடங்கியது. தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள இளைஞரும் கடுமையாக போராடி உள்ளார். மேலே விழுந்த சிங்கத்தை தூக்கி எறிந்து நையப்புடைத்துள்ளார்.

 

வெறிகொண்டு சிங்கத்தின் கழுத்தில் ஏறி மிதித்துள்ளார். இந்தப் போராட்டத்தின் இறுதியில் சிங்கத்தை அவர் கொன்றார்.

 

சிங்கத்தை போராடி வீழ்த்திய பின்னர் தனது காரில் ஏறிப் புறப்பட்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் உள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

ஆயுதங்கள் ஏதுமின்றி வெறும் கைகளால் சிங்கத்தை கொன்ற அந்த இளைஞருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. இறந்து கிடந்த மழை சிங்கத்தின் உடலை வனத்துறையினர் மீட்டனர். அந்த சிங்கத்துக்கு  ஒரு வயது தான் இருக்கும் என வனத் துறையினர் கூறியுள்ளனர்.

 

இதனிடையேகுறிப்பிட்ட மலைச்சாலையை அதிகாரிகள் மூடியுள்ளனர். மேலும் மலை சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மலை சிங்கங்கள் பொதுவாக அமைதியானவை.

 

ஆனால் இளம் சிங்கங்கள் தானாக வேட்டையாட கற்றுக் கொள்வதற்காக இது போல மனிதர்களை தாக்குவது அதிகரித்தபடி உள்ளது. மலைமீது ஓட்டப் பயிற்சி செய்பவர்கள் சிங்கங்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றனர்.

 

இதன் காரணமாகவே மனிதர்களை தாக்குகின்றன. வட அமெரிக்காவில் மட்டும் கடந்த காலங்களில் மலை சிங்கங்கள் தாக்கி இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்