பிரேசில் நாட்டில் தீராத முதுகுவலின் காரணமாக ஹாஸ்பிடல் சென்ற இளைஞனுக்கு 3 கிட்னி இருப்பதை ஸ்கேன் ரிபோர்ட்டில் கண்டுபிடிக்க சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீராத முதுகுவலி...! ஹாஸ்பிடல் சென்ற இளைஞனுக்கு 3 கிட்னி..! ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..! எங்கு தெரியுமா?
பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு முதுகுவலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த நபரின் உடலை சோதனை மருத்துவர் அவருக்கு பெரிய உடல் நிலை பாதிப்பு இல்லை என்றும் ஒரு ஸ்கேன் மட்டும் செய்யும் மாறு பரிந்துரைத்து இருகின்றார்.
இதனையடுத்து, அந்த நபர் மருத்துவர் சொல்லுவது போல், தனது உடலை ஸ்கேன் செய்து ரிப்போர்ட்டை மருத்துவரிடம் அளித்துள்ளார். மருத்துவரும் அவரின் ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கி பார்த்துள்ளார். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர் முதுகுபகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், இந்த வயதில் வருவது சாதாரண வலி தான் என்றும் கூறியுள்ளார்.
பிறகு மீண்டும் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர் அதிர்ந்து போனார். ஏன் என்றால் அவரின் ரிப்போர்ட்டில் அவருக்கு 3 கிட்னிகள் இருப்பதை கண்ட மருத்துவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். அந்த ரிப்போர்ட்டில் அந்த நபரின் இடது புறம் ஒரு கிட்னியும், வலது புறம் 2 கிட்னிகள் இருந்துள்ளது.
பொதுவாக மனிதனின் உடலில் உள்ள 2 கிட்னிகளும் சிறிய குழாய் வழியாக சிறுநீரகப்பையை அடையும். ஆனால் அந்த நபருக்கு 3 வது கிட்னி எந்த ஒரு குழாய் வழியாகவும் இல்லாமல் நேரடியாக சிறுநீரகப்பையில் இணைந்துள்ளது. ஆனாலும் அந்த நபருக்கு கிட்னி சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் இன்றி அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து தெரிவித்த மருத்துவர்கள் உலகில் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில்தான் 3 கிட்னிகள் உள்ள நபர்கள் கண்டறியப்படுகின்றனர். இந்த மாதரி மூன்று கிட்னி உடையவர்களுக்கு எவ்வித பாதிப்பும் உடலில் ஏற்படாது என்றும், இந்த நிகழ்வு கரு வளர்ச்சியின் போது நடக்க வாய்ப்பு உள்ளது என்றும், பொதுவாக இதனை மக்கள் உடல் பிரச்சனையின் போது கண்டறிகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.