குஜராத்தில் இளம்பெண் ஒருவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக வேறொரு ஆணை காதலித்து வந்த நிலையில் திடீரென்று அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 குழந்தைகள் பெற்ற நிலையில் 2 வது திருமணத்திற்கு தயாரான பெண்..! அவர் அறைக்குள் சென்ற தாயார் பார்த்த காட்சி!

குஜராத் மாநிலத்தில் வடாதோரா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இஷா தேசாய் என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இஷாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இஷா தன்னுடைய கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து தனது தாயாருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இதற்கிடையில் இஷா, சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் முடிவெடுத்து இருந்துள்ளனர். இதற்கிடையில் நேற்றைய தினம் இஷா தான் காதலித்து வந்த இளைஞரிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுதுதான் அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளது என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் மனமுடைந்த இஷா, தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டி இருக்கிறார்.
நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார், உடனடியாக அருகில் தச்சு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரை அழைத்து வந்து கதவை திறக்க வைத்திருக்கிறார். அப்படியாக கதவைத் திறந்த அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இருவரும் கதவை திறந்து பார்த்த பொழுது இஷா சடலமாக அந்தரத்தில் தூக்கில் தொங்கி இருந்திருக்கிறார். இதனை பார்த்த அவரது தாயார் அதிர்ச்சியில் கதறி அழுதிருக்கிறார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் இஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது செல்போனை பயன்படுத்தி அதன் மூலம் முதல்கட்ட விசாரணையும் ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.