எதிர் வீட்டுக்கார ஆணுடன் சிரித்து பேசிய மனைவி! ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்!

மனைவி இயல்பாக பழகுவதை தவறாக புரிந்துகொண்டு ஆட்டுகல்லை தலையில் போட்டு கொலை செய்த கணவன் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெற்ற குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்


சென்னை புளியந்தோப்பு மசூதி தெருவை சேர்ந்தவர் துக்காராம் வயது 42 இவருக்கு தாராபாய்(33) என்கிற மனைவியும், சஞ்சய் ராம்,அனும்ந்த் ராம்,ஸ்ரீராம் என மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். துக்காராம் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார்.

தாராபாய் கொளத்தூரில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தாராபாய் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் சகஜமாக பழகி வந்துள்ளார்.

அடிக்கடி குழந்தைகளுடன் வெளியே அழைத்து செல்லும்படியும் கணவனை கூறியுள்ளார். இந்த நிலையில் எதிர் வீட்டு ஆணுடன் தாரா சிரித்து பேசியுள்ளார். இதனால் மனைவி மீது சந்தேகம் அடைந்த துக்காராம் பல முறை சண்டையிட்டுள்ளர்.

சில முறை காவல் நிலையத்தில் துக்காராம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து சந்தேகம் அடைந்த துக்காராம் ஆத்திரத்தில் நேற்று இரவு வீட்டில் 3 குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்த மனைவி தாராபாய் தலையில் ஆட்டுகல்லை போட்டு கொலை செய்துள்ளான். மேலும் பயத்தில் தானும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இன்று காலை மூத்த மகன் சஞ்சய்ராம் எழுந்து பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் தந்தை இறந்திருப்பதை பார்த்து பயந்து போய் அருகே உள்ளவர்களிடம் கூறியுள்ளான். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து முதற்கட்ட விசாரணை செய்த போலீசார்  சந்தேகத்தில் மனைவியிடன் சண்டை போட்ட துக்காராம் தாராவை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த கொள்ளப்போவதாக பல முறை இதற்கு முன்பு தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தில் சந்தேக நபரால் தாய் மற்றும் தந்தையை இழந்து நிற்கும் குழந்தைகளின் நிலையை பார்த்து அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் தன்னை விட மனைவி தாரா அழகாக இருப்பதாக கூறியும் துக்காராம் சண்டையிட்டு வந்தது தெரியுமா வந்திருக்கிறது.