ஓயாமல் செல்ஃபி! மனைவியை விவாகரத்து செய்த கணவன்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் செல்ஃபிக்கு அடிமையான மனைவியிடம் இருந்து கணவன் விவாகரத்து கோரியுள்ளார்.


மத்தியப் பிரதேச மாநிலத்தில் செல்ஃபிக்கு அடிமையான மனைவியிடம் இருந்து கணவன் விவாகரத்து கோரியுள்ளார். 

அவர் போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் திருமணமானது முதல் தனது மனைவி தன்னைத் தானே தொடர்ந்து செல்ஃபி எடுத்துவருவதாகவும், மனைவியின் செல்ஃபி மோகத்தால் தங்களுக்கிடையே அவ்வப்போது சண்டைகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். செல்ஃபி மோகத்தால் தனது மனைவி பல நேரங்களில் தனக்கு உணவு கூட பரிமாறுவதில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மனைவி தனது கணவன் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் அளித்த புகாரில், தனக்கு கணவன் சாதாரண போன் மட்டுமே வாங்கிக் கொடுத்துவிட்டு தான் மட்டும் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது தாய் வீட்டாரிடம் பேசக் கூட தன்னை தனது கணவன் அனுமதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். 

ஆயிரம் காலத்துப் பயிரான திருமண பந்தத்தை கலைக்க அற்ப  காரணங்களைக் கூறிக்கொண்டு நீதிமன்றத்தின் முன் வந்து நிற்கும் அந்த தம்பதிக்கு கவுன்சிலிங் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கணவன் - மனைவி இருவரும் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  அப்போது அவர்களுக்கு இடையிலான பிரச்சனைக்கு ஸ்மார்ட் போன் தான் காரணம் என்பத தெரியவந்தது. இதனை அடுத்து கவுன்சிலிங் கொடுத்த மருத்துவர் சிறிது காலத்திற்கு இருவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருந்தால் போதும் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். இதனை ஏற்ற இருவரும் ஸ்மார்ட்  போன் பயன்படுத்தாமல் இருவரும் வாழ்ந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றனர்