ஒரு பெண்ணுக்கு 3 கணவர்கள்! மருமகளை மனைவியாக்கிய மாமனார்! அண்ணியை தாரமாக்கிய மைத்துனர்!

முத்தலாக், ஹலாலா என்ற பெயரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், மாறி மாறி ஒரு இளம்பெண்ணை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம், பரேய்லியில் உள்ள கிய்லா பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டவர். இதுபற்றி அவரது சகோதரி, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.  

 

அந்த புகாரில், ‘’எனது சகோதரி கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 5ம் தேதியன்று, கிய்லாவைச் சேர்ந்த இளைஞரை முஸ்லீம் மத வழக்கப்படி திருமணம் செய்துகொண்டாள். ஆனால், அவர்களுக்கு பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.

 

இதையடுத்து, எனது சகோதரியை, மாப்பிள்ளை வீட்டார் கடும் சித்ரவதை செய்ய தொடங்கினர். ஒருகட்டத்தில், எனது சகோதரியை, முத்தலாக் முறையில் விவாகரத்து அவரது கணவன் விவாகரத்து செய்தார்.  

 

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட எங்களின் குடும்பத்தார் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அவரை கெஞ்சி கேட்டோம். முஸ்லீம் வழக்கப்படி முத்தலாக் கொடுக்கப்பட்ட பெண்ணை கணவன் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது.

 

ஆனால் அந்த பெண் மறுமணம் அதாவது நிக்கா ஹலாலா செய்து மீண்டும் முத்தலாக் பெற்றால் முதல் கணவன் அந்த பெண்ணை சேர்த்துக் கொள்ள முஸ்லீம் மதம் அனுமதிக்கிறது. எனவே என் சகோதரியின் கணவர் என் சகோதரியை மறுமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.

 

அதுவும் எனது சகோதரியை அவரது மாமனாருக்கே மறுமணம் செய்து வைத்தனர்.   மருமகள் என்றும் பாராமல், மாப்பிள்ளையின் தந்தை எனது சகோதரியை பல நாட்கள் பாலியல் வல்லுறவு செய்துவிட்டு ஏற்கனவே கூறியபடி முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

 

இதையடுத்து, என் சகோதரியை கூறியவாறே அவரது கணவர் மறுமணம் செய்துகொண்டார். ஆனால் மீண்டும் சில மாதங்களில், முத்தலாக் கூறி என் சகோதரியை அவரது கணவர் விரட்டிவிட்டார்.

 

பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே செய்பதடி மறுமணம் (ஹலாலா) செய்யுமாறு கணவர் கூறியுள்ளார். இதனை அடுத்து எனது சகோதரியை அவரது கணவர் தனது உடன் பிறந்த சகோதரருக்கு நிக்கா ஹலாலா (திருமணம் ) செய்து வைத்துள்ளார்

 

கடந்த 2017ம் ஆண்டு மறுமணம் செய்து வைத்துள்ளான். அதனை தொடர்ந்து என் சகோதரியும் கணவரின் தம்பியும் என் சகோதரியுடன் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார். இது பிடிக்காமல் எனது சகோதரி எங்களிடம் உண்மையை கூறியதை தொடர்ந்து, நாங்கள் அதர்ந்து போனோம்.

 

அவளுக்கு சட்டப்படியான நியாயம் கிடைக்க நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுகிறோம்,’’ எனக் கூறப்பட்டுள்ளதுஒரு பெண்ணை ஒரு குடும்பத்தில் கணவன், மாமனார், மைத்துனர் என மூன்று பேர் திருமணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த புகாரை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட பரேய்லி நீதிமன்றம், இதன்பேரில் வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு முரண்பாடான பாலியல் தொல்லை, காயப்படுத்துதல், சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் அவனது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி, கிய்லா போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


Picture : Model