அதுக்குமா லஞ்சம்? கையும் களவுமாக சிக்கிய பெண் அதிகாரி!

வேலூர் அருகில் நிலம் வரைமுறை மற்றும் அளவை செய்வது விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய பெண் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது சம்பவம இடத்திலேயேப் பிடிபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


அரக்கோணம் மோசூர் கிராமத்தை சேர்ந்தவர்  முத்துராஜ் அவருக்கு சொந்தமான நிலம் அளவை மற்றும்  வரைமுறை செய்வது தொடர்பாக சான்றிதழ் வேண்டி ,அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை அணுகியுள்ளார்.அங்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருக்கும் பெண் அதிகாரி ஜீவா நிலத்திற்கு அனுமதி கொடுக்க, சுமார்  56 ஆயிரம் ரூபாய் கையூட்டு கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன  முத்துராஜ், இதனை அடுத்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம்  ஜீவா மீது புகார் அளித்துள்ளார். பின்னர் அதிகாரிகள் ஆலோசனையின் படி முத்துராஜ், பெண் அதிகாரி  ஜீவாவை, அரக்கோணம் ரயில் நிலையம் அருகே வரவழைத்தார்.

மேலும்  ரசாயணம் தடவிய 56,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுக்களை அவரிடம் கொடுக்க  மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தக்க சமயத்தில் பெண் அதிகாரி ஜீவாவை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும்.சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.