மாமியார் கால்களை பிடிக்க, மகன் கைகளை கட்டிப்போட, கணவன் காதுகளில் பூச்சி மருந்தை ஊற்றிய மனைவி..! அரியலூரில் திக் திக் சம்பவம்! அதிர்ச்சி காரணம்!

அரியலூர் மாவட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கில் அவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல்வெளியாகி உள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் குடித்துவிட்டு வந்து தினமும் தகராறு செய்த குடும்பத் தலைவரை குடும்பமே சேர்ந்து கொலை செய்தது தற்போது தெரியவந்துள்ளது. இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற ஓட்டுநருக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினம குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இவர்கள் வீட்டில் தினமும் குடும்பத் தகராறு நடக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் குடிபோதையில் இருந்த ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜசேகரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வறிக்கையில் அவர் தற்கொலை செய்யவில்லை என்பதும் பூச்சி மருந்து உடலுக்குள் சென்றதால் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜசேகரின் மனைவி மனைவி சுகுணா, மகன் ரவிவர்மன், தாய் செல்வி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ராஜசேகரை கட்டிப்போட்டு காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் ராஜசேகரின் மனைவி சுகுணா, தாய் செல்வி, மகன் ரவிவர்மன் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.