எடப்பாடியாருக்கு வித்தியாசமான வரவேற்பு... அரியர் மாணவர்களின் வாக்குறுதி

கொரோனா காலத்தில் மாணவர் சமுதாயம் பெரும் வேதனையில் இருந்தனர். தங்கள் படிப்பு என்ன ஆகுமோ என்ற கவலையில் இருந்ஹனர். இந்த நேரத்தில், தேர்வுக் கட்டணம் செலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.


ஆனால், இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட் மாதத்தில்அறிவித்தார்.

இதையடுத்து, அரியர் மாணவர்களின் அரசனே என்று பல ஊர்களில் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். சமூக வலைத்தளங்களிலும் இந்த போஸ்டர்கள் வைரலாகின.

இந்நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மாணவர்கள் அவ்வாறு பேனர் தயார் செய்து அதை ஒவ்வொருவரும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியே சென்ற ஊர் மக்கள் சிலர் சிரித்து ரசித்தபடியே சென்றனர். 'எடப்பாடியார், அரியர் பசங்க நாங்க; எங்க ஓட்டு இரட்டை இலைக்கே' என்ற இந்த போட்டோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

கொடுத்த வாக்கை காப்பாத்துறாங்களே...