டிரான்ஸ்ஃபார்மர் அமைத்து மின்சாரம் திருடிய பலே வியாபாரி! ராசிபுரம் அதிர்ச்சி!

மின்வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே டிரான்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் அமைத்துள்ளதாக புதிய ரியல் எஸ்டேட் அதிபர் மீது புகார் எழுந்துள்ளது.


பொதுவாக ஒரு மனை, வீடு விற்பவர்கள். எல்லா வசதிகளும் செய்து தருவதாக வாக்குறுதி அளிப்பார்கள். அதாவது தண்ணீர், தார்சாலை, மின்சாரக் கம்பங்கள் என நம்மை எப்படியாவது வீடு வாங்க வைக்க வேண்டும் என வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால் மனை வாங்கிய பிறகு நாங்கள்தான் அப்போதே சொன்னோமே….

இதெல்லாம் வராது என்று என கழட்டி விடுவார்கள். சரி விஷயத்துக்கு வருவோம். நாமக்கல் ராசிபுரம் அருகே தன்னுடைய நிலத்தினை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முடிவெடுத்த காய்கறி வியாபாரி ஒருவர் மின்வாரிய அலுவகத்திற்கே தெரியாமல் தன்னுடைய நிலத்தில் 2 மின் கம்பங்கள் ஒரு டிரான்பார்மர் அமைத்து அசத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முள்ளுக்குறிச்சியை சேர்ந்த ரமேஷ் காய்கறி வியாபாரி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் மின்வாரிய முன்னாள் ஒப்பந்த தொழிலாளர், புது ரியல் எஸ்டேட் அதிபர் என பல முகங்கள் அவருக்கு உண்டு. முள்ளுகுறிச்சி பகுதியில் தன்னுடய நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றிவிட்டது மட்டுமின்றி 2 புதிய மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மரை அமைத்து மின்திருட்டிலும் ஈடுபட்டுள்ளது நமக்கு கிடைத்த கூடுதல் தகவல். 

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் ரமேஷ் மீது மின்வாரிய அதிகாரிகள் ஆயில்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை பதிவுசெய்த போலீசார் ரமேஷிடம் விசாரணை நடத்தியபோது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து மின்வாரிய அலுவலகத்திற்கு 70,000 ரூபாய் அபராதம் செலுத்தினார் ரமேஷ்.

பொதுவாக மின்வாரிய உபகரணங்கள் நேரடியாக தனிப்பட்ட முறையில் யாரும் வாங்க முடியாது. அது அரசாங்கத்திற்குத்தான நேரடியாக விற்பனை செய்ய முடியும். இந்த சம்பவத்தால் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மரும் திருடப்பட்டதா என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறது என்பது எங்களுக்கு தெரிகிறது. அதற்கு பதில் சொல்ல நேரமில்லை… அடுத்த செய்தியை படிக்க போவோம்.