எடப்பாடியாரின் அரசுக்கு மீண்டும் ஒரு மகுடம்... கொரோனாவைத் தாண்டி தொழில் புரட்சி

கொரோனா காலத்தில் இந்திய நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தில் திணறிக்கொண்டு இருக்கும் சூழலில், தமிழகம் மட்டும் முதல்வர் எடப்பாடியாரின் சீரிய தலைமையில் சாதனை மேல் சாதனை நிகழ்த்திக்கொண்டுள்ளது.


கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொரோனா தனது கோர முகத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொழில்கள் முடங்கியதால் புதிய முதலீடுகள் வருவதும் தடைபட்டது. கொரோனா தடுப்புப் பணிகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்ட எடப்பாடி அரசு, மற்றொரு புறத்தில் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது. தலைமைச் செயலாளர் சண்முகம், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டன.

இதன் காரணமாக 66 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 80 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

‘’ இந்தியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதற்காக தமிழக அரசு நியமித்துள்ள இரண்டு குழுக்களும் விரைவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்படுகின்றன. அத்துடன் தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இங்கு குறைவின்றி உள்ளன. இதனால்தான் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது’’ என்கிறார் கைடன்ஸ் தமிழ்நாடு என்கிற தொழில் வளர்ச்சிக்கான குழுவின் தலைவர் நீரஜ் மிட்டல்.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முதல்வர் எடப்பாடி 19 ஆயிரத்து 955 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதன்மூலம் 26 ஆயிரத்து 509 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் சுமார் 4ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல்லும் நாட்டினார்.

தமிழகத்தின் அண்மைக்கால வரலாற்றில் இப்படி தொழில் முதலீடுகள் கொட்டியதில்லை. இந்த வரலாற்று சாதனை பற்றி கருத்து தெரிவிக்கும் தொழில் துறையினர்,’’ ஆட்சித்தலைமை ஆளுமையுடனும், நிர்வாக திறனுடனும் செயல்பட்டால் அந்த மாநிலம் நிமிர்ந்து நிற்கும். இப்போது தமிழகத்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைசிறந்த நிர்வாகத் திறமையால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. எடப்பாடியின் ஆட்சி இனியும் தொடரும் பட்சத்தில் நாட்டிலேயே தமிழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுப்பது நிச்சயம்’’ என்கிறார்கள்.

தொழில் முதலீடுகள் ஆய்வு நிறுவனமான ’கேர்’ அண்மையில் வெளியிட்ட பட்டியலில்தான் தமிழகத்திற்கு இந்த சிறப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.