பிறக்கும் போதே 6 கிலோ! தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்க முடியாமல் திணறிய டாக்டர்கள்! எங்கு தெரியுமா?

பெங்களூரில் தம்பதியினர் ஒருவருக்கு பிறக்கும் பொழுதே 6 கிலோ எடையுடன் குழந்தை ஒன்று பிறந்து மருத்துவர்களையும் செவிலியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


டார்ஜிலிங்கை சேர்ந்த யோகேஷ் மற்றும் சரஸ்வதி தம்பதியினர் பெங்களூருக்கு வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 16 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகின்றனர் அவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் சரஸ்வதி இரண்டாவது முறையாக மீண்டும் கர்ப்பம் தரித்து இருக்கிறார். அவரது வயிறு மிகப் பெரியதாகவும் அவரது எடை மிகவும் அதிகமாகவும் காணப்பட்டது. இதனை வைத்துப் பார்க்கும் போது இவருக்கு இரட்டை குழந்தைகள் தான் இருக்கும் என மருத்துவர்கள் முதலில் கூறியிருக்கின்றனர். பின்பு அவரை பரிசோதித்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஒரு குழந்தைதான் என்று உறுதி செய்திருக்கின்றனர்.

இந்நிலையில் சரஸ்வதிக்கு கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அப்போது அவர் மிகவும் எடை கூடுதலாக இருப்பதால் சுகப்பிரசவம் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பின்னர் அறுவை சிகிச்சையின் மூலமாக சரஸ்வதியின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்து உள்ளனர் அப்போது அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது .

அதாவது சரஸ்வதியின் குழந்தை பிறக்கும்பொழுது 5.9 கிலோ எடையுடன் பிறந்து மருத்துவர்களையும் செவிலியர்களையும் மிகவும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. குழந்தையின் எடை மிகவும் அதிகமாக இருந்ததால் மருத்துவர்கள் அந்த குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தக் குழந்தை 5.9 கிலோ எடையுடனும் 40 சென்டி மீட்டர் உயரத்தில் உள்ளது. 

சரஸ்வதி 40 வாரங்கள் முழுமையாக கர்ப்ப காலத்தில் முடித்த பின்புதான் இந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சரஸ்வதி கடந்த பதினான்கு வருடங்களுக்கு பின்புதான் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.