16 வயதில் திருமணம்! கள்ளக்காதல்! போலீசை அதிர வைத்த கோவை சிறுமி!

கோவையில் திருமணமனா 16 வயது கொண்ட சிறுமி தனது கள்ளக்காதளுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. இந்நிலையில், திருமணம் செய்த வாலிபர், அவர் குடும்பத்தில் உள்ளார் முதல் கள்ளக்காதல் வரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இச்செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை மாவட்டம் மரக்கடை அருகே உள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் அவர்கள் அப்துல் சலாம். இவரின் மனைவின் பெயர் பர்சானா. இவர்களுக்கு ஒரு மகன் உண்டு அவரின் பெயர் முகமது நிஷார் . இவர் அந்த பகுதியில் செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். 28 வயது ஆனா மகனுக்கு திருமணம் செய்த நினைத்த பெற்றோர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி உறவினர்கள் முன்னிலையில் போத்தனூர் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 16 வயது கொண்ட சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.

இதற்கிடையில், சிறுமிக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரஞ்சித்குமார் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களின் நட்பு கள்ளக்காதலாக மாறியது. மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் அவரது கணவர் முகமது நிஷாருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியான 16வயது சிறுமியை கண்டித்தார். இதனையடுத்து அந்த சிறுமி கடந்த 5-ந் தேதி அன்று தனது கள்ளக்காதலன் ரஞ்சித்குமாருடன் வீட்டை விட்டு ஓடினார்.

மனம் உடைந்த முகமது நிஷார் அவர்கள் வெரைட்டிஹால் ரோடு காவல்துறையில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். மேலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முகமது நிஷார் 16 வயது சிறுமியை திருமணம் செய்தது என்பது தெரியவந்தது. பின்னர் வெரைட்டி ஹால் ரோடு காவல்துறையினர் இது குறித்து மேற்கு அனைத்து மகளிர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

காவல் ஆய்வாளர் பிரபா தேவி வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற ரஞ்சித்குமாரை கைது செய்தனர். இதனையடுத்தி சிறுமியை திருமணம் செய்த முகமது நிஷாரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரின் மீதும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த குழந்தை திருமணம் செய்து வைத்த அப்துல் சலாம், பர்சானா ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்காதலன் முதல் கணவன் குடும்பத்தில் உள்ள அணைவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.