ஹோட்டலில் வேலை செய்யும் கனா கானும் காலங்கள் நாயகன்! என்ன கொடுமை இர்ஃபான் இது?

பிரபல விஜய் டிவி தொடரில் நடித்து வந்த இர்ஃபான் தற்போது வெயிட்டராக பணிபுரிவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியில் இளம் வயதினருக்கு பிடித்தமான தொலைக்காட்சி தொடராக "கனா காணும் காலங்கள்" விளங்கியது. ஒவ்வொரு இளைஞரின் கல்லூரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்ததால் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்த தொடரில், பாலா கேங் மற்றும் இர்ஃபான் கேங் என இரு பிரிவுகள் இருக்கும். இவ்விரு பிரிவுகளும் அடிக்கும் லூட்டியை மையமாக வைத்தே இந்தத் தொடர் இயக்கப்பட்டது. 

இந்த தொடரில் இர்ஃபானாக நடித்தவர், தொடர் முடிந்த பிறகு சரவணன் மீனாட்சி தொடர்களிலும் நடித்திருந்தார். மேலும் "பட்டாளம்" என்று சினிமாவிலும் இதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அதன் பிறகு அவருக்கு எந்தவித வாய்ப்பும் கிட்டவில்லை. சிறுவயதிலேயே இயக்குநராக வேண்டுமென்ற ஆசை இர்பானிடம் இருந்தது. தற்போது அதற்காக போராடி வருகிறார். யாரிடமும் பணத்தை எதிர்பார்க்ககூடாது என்பதற்காக உணவகங்களில் வெயிட்டராக பணிபுரிந்து வருகிறார். 

பல துன்பங்களை அனுபவித்தாலும், படத்தை இயக்கியே தீருவேன் என்று முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். இவருடைய உழைப்பு வெற்றிபெற ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.