கணவனை பிரிந்து தனிமையில் வசித்த இளம் ஆசிரியை! 9 வயது மாணவனால் அரங்கேற்றப்பட்ட பயங்கரம்! பீதி கிளப்பும் காரணம்!

மும்பையில் 9 வயது சிறுவன் டியூஷன் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய். இவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது தாய் மற்றும் மகனுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்ப செலவிற்காக தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் ஆசிரியையிடம் டியூஷனுக்கு வந்துள்ளார். இந்நிலையில் மாணவனை டியூஷனில் விட வந்த அவரது தாய் ஆசிரியையிடம் கடனாக பணம் கேட்டுள்ளார் அதற்கு ஆசிரியை பணம் இல்லை என மாணவனின் தாயை கடுமையாக திட்டி அனுப்பியுள்ளார்.  

இந்நிலையில் மனமுடைந்த தாய் அங்கேயே அழ தொடங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவன் ஆசிரியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு வந்துள்ளான்.பிறகு கத்தியை எடுத்துக்கொண்டு டியூசன் நோக்கி சென்று ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளான்.

இந்நிலையில் ஆசிரியை மாணவனை அடிக்க சென்றதால் மாணவன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியையின் வயிற்றில் கடுமையாக குத்தியுள்ளான். ஆயிஷா கத்தி கூச்சல் இட்டபோதுஅருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ஆயிஷா விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியையை குத்திக்கொலை செய்த மாணவன் தலைமறைவானதாக தெரிகிறது.ஆயிஷாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனை கைது செய்தனர். மாணவனிடம் விசாரித்தபோது அவர் கொலைக்கான இரண்டு காரணங்களை போலீசில் தெரிவித்துள்ளான். இந்நிலையில் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

அது என்னவென்றால் ஆசிரியை தனது தாயை திட்டியதற்காக கொலை செய்ததாகவும், தனது உறவினர்கள் முன்னிலையில் தன்னை திட்டியதாகவும் தெரிவித்துள்ளான். மற்றும் அவரது தந்தையிடம் மாணவன் கூறியதாவது யாரோ முகம் தெரியாத இருவர்கள் ஆயிஷாவை கத்தியால் குத்தும் படி கூறியதாகவும் அதற்கு மறுப்புத் தெரிவித்தால் தன்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இரு வேறு காரணங்களைக் கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.